தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! இரட்டிப்பு மகிழ்ச்சியில் திருவாரூர் மக்கள்!   - Seithipunal
Seithipunal



பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்பஅட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இத்துடன், பொங்கலை சிறப்பாக கொண்டாட ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என அரசு அறிவித்தது. 

இதனிடையே, திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால், தேர்தல் விதியிமுறையின் படி  திருவாரூர் தொகுதிக்கு தவிர்த்து மற்ற பகுதிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என  தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் திருவாரூரிலும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

பொங்கல் பரிசு 1000 & சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்குமா என திருவாரூர் மக்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில், தற்போது தமிழக அரசு வெளியிட்ட செய்தியால் மகிழ்ச்சியில் உள்ளனர். 

மேலும், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், நிவாரண பணிகளும் தொடர்ந்து நடைபெற இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THiruvarur People Celebration


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->