உலகிற்கே தெரிந்த ஒன்று ! தேர்தல் ஆணையத்திற்கு தெரியலையா? கொந்தளிக்கும் விஜயகாந்த்!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் தொகுதிக்கு வருகிற ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. வருகிற ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டதால், திருவாரூர் இடை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில், திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது, கஜாபுயல் பாதிப்பு என்பது உலகிற்கே தெரிந்த ஒன்று. இந்நிலையை அறியாமல் இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்ததை, மக்கள் கேலிக்கூத்தாக பார்க்கின்றனர். ஜனநாயக நாட்டில் தேர்தல், கேலிகூத்தாக, கேள்விக்குறியாக மாறியிருப்பதை தேமுதிக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் . 

திருவாரூர் இடைத்தேர்தலை அறிவித்த போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழக அரசோடு கலந்து பேசி முடிவெடுத்திருந்தால் ரத்து என்ற நிலை ஏற்பட்டிருக்காது. 

இவ்வாறு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur By Election Cancel Vijayakanth Talk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->