திருவாரூர் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனுவில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. 

கருணாநிதியின் மறைவை அடுத்து வருகிற 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த  இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

அந்த வகையில்,  இன்று  3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். பின் 11 ஆம் தேதி வேட்புமனு பரிசீலிக்கப்படும். வேட்புமனுவை திரும்ப பெற ஜனவரி 14 கடைசி தேதியாகும். இதைத்தொடர்ந்து, ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி 31ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனிடையே, திருவாரூரில் இடைத்தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்தது. 
 
இந்நிலையில்,  திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அறிவிப்பாணைக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur By Election 2019 : High Court


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->