சற்றுமுன்: திருவாரூர் இடைத்தேர்தல் நடப்பதில் சிக்கல்.! அடுத்தடுத்து போடப்பட்ட வழக்குகள்.!! அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


வருகிற 28 ஆம் தேதி திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இறுதினங்களுக்கு முன் வெளியிட்டது. 

அதன்படி, நாளை முதல் 10 ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல். வேட்புமனுவை திரும்ப பெற ஜனவரி 14 கடைசி தேதி. ஜனவரி 28ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், ஜனவரி 31ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப படிவங்களை அக்கட்சி வழங்கி வருகிறது. திமுகவை பொறுத்தவரை முக ஸ்டாலின் நேரடியாக அந்த தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியது. திமுகவிற்கு ஆதரவாக மதிமுக, கம்னியூஸ்ட், மமக உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரம் செய்ய தயாராகிவிட்டது. 

இந்நிலையில், திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு அளிக்கும் தோழமை கட்சியான கம்னியூஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அவர்கள், திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளி வைக்குமாறு, தலைமை தேர்தல் ஆணையரிடம் நேரடியாக மனு அளித்துள்ளார். 

மேலும், அடுத்த அதிரடியாக டி.ராஜா அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளார். முன்னதாக, திருவாரூர் இடைத்தேர்தலை ஒத்திவைக்க கோரி,  திருவாரூரைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கஜா புயலால் திருவாரூர் மக்கள் பல ஆவணங்களை இழந்துள்ளனர். ஆவணங்கள் இல்லாததால் பலருக்கு ஓட்டு உரிமை பறிபோகும் நிலை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUVARUR


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->