அர்ச்சகர்களை மணந்தால் 3 லட்சம் ரூபாய் பரிசு அதிரடி அறிவிப்பு.!!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா மாநில முதல்வராக சந்திரசேகர ராவ் உள்ளார்.  

தெலுங்கானா அரசு, மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்யும்பெண்களுக்கு, 3 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த மாநில மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- 

கோயில்களில் அர்ச்சகர்களாக இருக்கும் இளைஞர்களுக்கு வருமானம் குறைவாக இருப்பதால், அவர்களை திருமணம் செய்ய பெண்கள் தயங்குகின்றனர்.

இதனால், திருமணம் ஆகாமல் பல பிராமண இளைஞர்கள் உள்ளனர்.

இதையடுத்து, கோயில் அர்ச்சகர்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு, 3 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கும், "கல்யாண மஸ்து" திட்டத்தை தெலுங்கானா  மாநில அரசு துவக்கி உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், அந்த பரிசுத்தொகை கணவன் மற்றும் மனைவியின் பெயரில் நிரந்தர வாய்ப்பு தொகையாக வங்கியில் செலுத்தப்படும்.

அதனோடு, திருமண செலவிற்காக 1 லட்சம் ரூபாய் மாநில அரசின் சார்பில்  வழங்கப்படும்.

சமீபத்தில் கூட, அரசு ஊழியர்களுக்கு நிகரான சம்பளம், கோயில் அர்ச்சகர்களுக்கு வழங்கப்படும் என்று தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டங்களினால், கோவில் அர்ச்சகர்களுக்கு மணப்பெண்கள் கிடைப்பது எளிதாகும் என்று அந்த அதிகாரி கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The new marriage scheme of Telangana government


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->