மேகதாது அணை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி உள்ளது? திமுகவின் அந்தரங்கத்தை அவிழ்த்து விட்ட துணை சபாநாயகர்!! - Seithipunal
Seithipunal


நேற்று கரூரில், செய்தியாளர்களிடம் பேசிய பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்கள், ' மேகதாது ஆணை கட்டுவது தேவையற்ற ஒன்று தான். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் அதிமுக நிச்சயமாக எடுத்துரைக்கும். பெங்களூரு மக்களுக்கு தண்ணீர் வேண்டுமெனில் ஒக்கேனக்களில் அணை கட்டிக்க கொள்ளலாம். 

இதன் மூலம், மின் உற்பத்தியும் கிடைக்கும். ஆனால், அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் தலைமையிலான அரசு இந்த அணையை கட்ட முயல்வது கண்டனத்திற்குரியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழியும் ஸ்டாலின் இதை பற்றி பேச தகுதியற்றவர். காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இதை பற்றி ஏதும் பேச கூடாது என்றும்,

மேலும், பாராளுமன்ற தேர்தலில் அதிமுக முக்கிய பங்காற்றும் என்பது தவிர்க்க இயலாதது. மேலும், கூட்டணி குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும். இனி தமிழகத்தில் பாஜகவோ, காங்கிரஸோ கனவில் கூட தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றும், 

கஜா புயல் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அப்போது, கஜா நிவாரண பொருட்கள் தமிழகத்திற்கு கிடைக்கும் படி ஏற்பாடு செய்யப்படும். மேலும், ஜெயலலிதா இறப்பிற்கு திமுக தான் காரணம். திமுகவினர் தான் ஜெயலலிதா மீது வழக்கு பதிவு செய்து அவரை பெங்களூர் சிறையில் அடைத்தனர். 

பின் அவ்வழக்கில் வெற்றி கண்டு ஜெயலலிதா அவர்கள் வெளிவந்தார். இருந்தபோதும், மீண்டும் அவ்வழக்கில் மேல்முறையீடு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். இது மன்னிக்க கூடிய செயல் இல்லை. இதற்கெல்லாம் சேர்த்து வருகிற தேர்தலில் தக்க பதிலடி கொடுப்போம்.' என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambidurai said stalin should not talk about meketatu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->