தமிழக நலனுக்காக குரல் கொடுக்கும் ஆளும் கட்சி! தமிழகத்தை புறக்கணிக்கும் மத்திய அரசு! கோவத்தில் கொந்தளிக்கும் தமிழக எம்.பி! - Seithipunal
Seithipunal


மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திண்டுக்கல் அருகே மாரம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்டார். அவர் அப்போது செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியவை,

தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியை மத்திய அரசு கொடுக்கவில்லை. மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நிலுவைத் தொகை மற்றும் கஜா புயல் பாதிப்புகளுக்கு ரூ.15 ஆயிரம் கோடி தமிழக அரசு சார்பில் கேட்கப்பட்டது. ஆனால் எதுவும் மத்திய அரசு வழங்கவில்லை. தமிழக உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருவதால் என் மீது பா.ஜ.க. அமைச்சர் மற்றும் நிர்வாகிகள் குறை கூறிவருகிறனர்.

இதேபோல் தமிழக நலனுக்காக மக்களவையில் குரல் எழுப்பிய அ.தி.மு.க. எம்.பி.க்கள் 34 பேர் மீது நடவடிக்கை எடுத்து சஸ்பெண்டு செய்தனர். ஆனால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

ஒரு எம்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டால் அந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய பிற கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்துவது வழக்கமான ஒன்று. ஆனால் அ.திமு.க. எம்.பி.க்கள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கையை ரத்து செய்ய எந்த ஒரு கட்சியினரும் ஆதரவு தரவில்லை. இதன் மூலம் தமிழகம் எந்த அளவுக்கு புறக்கணிக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் தெரியவந்தது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க விரும்பும் பா.ஜ.க. எம்.பி.க்களும் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை. தேர்தல் அறிவிக்கப்படாததால் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambi durai says modi govt


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->