வீட்டு கதவை உடைத்து, காங்கிரஸ் தலைவர் திடீர் கைது! - Seithipunal
Seithipunal


வரும் 7-ம் தேதி 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இங்கு டி.ஆர்.எஸ். கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள போராடி வருகிறது.

காங்கிரஸ் கட்சி தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இதேபோல் பாஜகவும் தேர்தல் களத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இன்று மாலை கோதண்கல் தொகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் சந்திரசேகர ராவ் பங்கேற்க உள்ளார். கோதண்கல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் செயல் தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார்.

இதற்கிடையே கோதண்கல் தொகுதிக்கு வருகை தரும் சந்திரசேகரராவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், இன்று அதிகாலை ரேவந்த் ரெட்டியை அவரது வீட்டில் வைத்து காவல் துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் அவரது சகோதரர், பாதுகாவலர், வீட்டு காவலாளி ஆகியோரையும் அழைத்து சென்றுள்ளனர்.

இந்த கைது குறித்து ரேவந்த் ரெட்டி மனைவி கீதா ரெட்டி கூறியதாவது,

இன்று அதிகாலை 3 மணிக்கு சிலர் எங்களது வீட்டு கதவை உடைத்து அத்துமீறி உள்ளே நுழைந்தனர். ஒரு அறையில் நான், கணவர், மகளுடன் தூங்கி கொண்டிருந்தோம். அவர்கள் எனது கணவரை அங்கிருந்து அழைத்து சென்றுவிட்டனர். இப்படியா எங்களை நடத்துவது என்று ஆவேசத்துடன் கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telangana congress leader arrested


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->