அலெர்ட்.! நாளை முதல் இரண்டு நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


தமிழக அரசால் நடத்தப்பட்டுவரும் மதுபான கடைகளால் தான் (டாஸ்மாக்) தமிழகத்தில் நடக்கும் பாதி குற்ற சம்பவங்களுக்கு காரணம் என்று தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றது. இதனை முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அவர்களும் தெரிவித்துள்ளார். 

இந்த டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி தமிழகத்தின் பல பகுதிகளில் தினமும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஒருபக்கம் எவ்வளவு எதிர்ப்பு இருந்தாலும், இந்த மதுபான கடைகளுக்கு ஆதரவும் இருந்துதான் வருகிறது. தற்போது தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர் என்று கைகாட்டப்படும் முக ஸ்டாலின் அவர்கள் கூட மதுபான கடைக்கு எதிராக கண்டனம் மட்டுமே தெரிவிக்கிறார். பூரண மது விளக்கு கொண்டு வர எந்த கொள்கை முடிவையும் இதுவரை அறிவிக்கவில்லை.

யாரை சொல்லியும் குற்றமில்லை, தமிழக அரசின் முக்கிய வருமானவே இந்த டாஸ்மாக் கடைகள் தான். இதனை மூடிவிட்டால் தமிழக அரசு இயங்காது என்று தமிழக அமைச்சர்களே  தெரிவித்து வருகின்றனர். ஒரு நாள் டாஸ்மாக் கடை இயங்காவிட்டால் தமிழக அரசுக்கு பல கோடிக்கணக்கில் வருமானம் இழப்பு ஏற்படும் என்று தமிழக குடிமகன்கள் கருது தெரிவிக்கும் அளவிற்கு நிலைமை வந்துள்ளது. 

இப்படி இருக்க நாளைமுதல் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இது குறித்து தமிழ்நாடு டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் ராஜவேல் தெரிவிக்கையில், ''கடந்த 2003 ஆம் ஆண்டு டாஸ்மாக்  பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு இதுவரை பணி நிரந்தரம் செய்யாதது தொடர்பாக பலமுறை தமிழக அரசிடம் முறையிட்டும், தமிழக அரசு அதற்கான எந்த பதிலையும் தரவில்லை.

இதனையடுத்து, வரும் 8.9 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதிலும் உள்ள 6,000 டாஸ்மாக் கடைகள் மூடி,வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். இந்த போராட்டத்தில்,டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என மொத்தம் 27000 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த போராட்டத்தில் 11 தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளது'' என்றும் ராஜவேல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC MAY BE SHUTDOWN FOR TWO DAYS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->