இந்திய மருத்துவர் மாணவர் சேர்க்கை! தமிழக அரசின் வரலாற்றில் ஆச்சர்யம் அளிக்கும் அதிரடி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டு மாணவர் சேர்க்கை அதேபோல் இந்திய மருத்துவப் படிப்புகளான சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் போன்றவற்றிற்கும்  நீட் தேர்வின் மூலம் கலந்தாய்வு  நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு நாட்டில் பல கட்சிகளும்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் தேர்வு தொடர்பாக  முதலமைச்சர்  பழனிசாமி தலமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில்,  அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடன் நீட் தேர்வு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை செய்தார். 

தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கும்படி சி.பி.எஸ்.இ.-க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவைத் தொடர்ந்து கவுன்சிலிங்கை எப்படி நடத்துவது? என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 

பின்னர்  சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில்  சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ  படிப்புகளுக்கு நீட் தேர்வு நடத்தக்கூடாது என்றும், பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தலைமைச்செயலாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu govt decide conduct counciling +2 mark base for indian medical studies


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->