புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய, முதல்வர் நேரடியாக களமிறங்குகிறார்!! ஆய்வு செய்யும் இடங்கள் அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


கஜா புயல் காரணமாக  நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலும் சேதமடைந்துளளது. கஜா புயலுக்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.  புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள், வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன.  

இதனால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். 

இதனிடையே, பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 2 மாவட்டங்களை மட்டும் முதல்வர், துணை முதல்வர் இணைந்து ஹாலிகாப்டர் மூலம் பார்வையிட்டனர். இதற்கு  பல அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  இதற்கு விளக்கம் அளித்த முதல்வர், வானிலை நிலவரம் சரி இல்லாததால், மற்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை என்றார்.
 
இந்நிலையில், கஜா புயல் பாதித்த நாகை மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி நாளை ஆய்வு மேற்கொள்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. நாகையில் நாளை காலை 8 மணிக்கு முதல்வர் பழனிசாமி தனது ஆய்வை தொடங்குகிறார்.  நாளை பிரதாமபுரம், காமேஷ்வரம், விழுந்தமாவடி, வேட்டைகாரனிருப்பு, கோவில்புத்து, வானவன்மாதேவி, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பெரியகுத்தகை, வேதாரண்யம், ஆதனூர், ஆயக்காரன்புலம், மருதூர் ஆகிய பகுதிகளில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்ய உள்ளார். இந்த முறை ரயிலின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்ய உள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Going Naagai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->