ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக வரமாட்டார்! திமுக என்பது ஒரு குடும்பக்கட்சி! வெளுத்துவாங்கிய முதல்வர்!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் இன்று பல்வேறு  இடங்களில் நடந்து வரும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக   இன்று காலை புதுக்கோட்டை மாவட்டத்தில் 2000 காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.  

அதை தொடர்ந்து, சாத்தூர், மதுரை பாண்டிகோவில், கள்ளிக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களை நடந்த கட்சி நிகழ்ச்சிகளில் முதல்வர் கலந்து கொண்டார். மேலும், நெல்லையில் மாற்று கட்சியை சேர்ந்த 5,000 பேர் முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 

இந்திய அளவில் தமிழகம் சிறந்த மாநிலமாகவும், அமைதி பூங்காவாகவும் விளங்குகிறது. அரசின் திட்டங்கள் அனைத்து மக்களையும் சென்று சேரும் வகையில் ஆட்சி நடக்கிறது. 

ஸ்டாலின் ஒருபோதும் முதலமைச்சராக வரமாட்டார். திமுக என்பது குடும்பக்கட்சி; அதிமுக என்பது மக்களின் கட்சி என முதல்வர் தெரிவித்தார். 

மேலும், அதிமுக கட்சி ஆலமரம் போன்றது, அனைவரையும் வரவேற்று இடம் கொடுக்கும். ஜனநாயக கட்சி அதிமுக மட்டுமே, திமுக போன்று மற்ற கட்சிகள் எல்லாம் வாரிசு அரசியலை கொண்டது.  எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர்.

இவ்வாறு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu CM Edapadi K Palanisami Talk About Stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->