திமுகவும் நமதே.! திகாரும் நமதே.! ஸ்டாலின் வெற்றி முழக்கத்திற்கு பதிலடி கொடுத்த தமிழிசை ! - Seithipunal
Seithipunal


கரூர், திருமாநிலையூரில் நேற்று மாற்றுக் கட்சியினர் திமுக.,வில்  இணையும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிற கட்சிகளை சேர்ந்த 40,000க்கும் அதிகமான பேர் திமுகவில் இணைந்தனர்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு முக. ஸ்டாலின் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

      
 
அப்பொழுது, நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்றத் தேர்தல், 20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் என எது நடந்தாலும், அனைத்திலும் தி.மு.க. கட்சி, அதன் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு முழு வெற்றியை பெறும். ஜனநாயக போர்க்களத்தில்தான் நமக்கு நிறைய பணிகள் உள்ளன. மத்தியிலும், மாநிலத்திலும் எந்த நேரத்திலும் ஆட்சி மாற்றம் நடக்கத்தான் போகிறது.

எனவே நம்முடைய முழக்கமாக “நாடும் நமதே... நாற்பதும் நமதே” என்பதே  இருக்க வேண்டும் என்று பேசியிருந்தார்.

இந்நிலையில் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் நாடும் நமதே நாற்பதும் நமதே. என்று கனவு காணும் ஸ்டாலின் அவர்களே,! ஊழல் சர்க்கார் நமதே! ஊழலுக்கான சர்க்காரியா கமிஷனும் நமக்கே என்று நடந்த தி மு க ஊழல் ஆட்சியை மக்கள் மறக்கவில்லை!  தி மு க வும்...நமதே! திகாரும்...நமதே ! என்று கடந்த காங்கிரஸ் கூட்டணியில் உங்கள் சாதனையையும் மக்கள் மறக்கவில்லை என பதிவிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilisai sowndarajan tweet against stalin


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->