உணவின்றி தவிக்கும் மக்களின், உணவை சாப்பிட்ட முதல்வர் பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை, முதல்வர் பழனிச்சாமி பார்வையிட்டு வருகிறார். நேற்று இரவு சென்னையில் இருந்து தொடர்வண்டி மூலம் பயணம் செய்து நாகையில் இன்று ஆய்வை மேற்கொண்டார்.

நிவாரண முகாமில் உள்ள மக்களை சந்தித்து நிவாரண பெருட்களை வழங்கினார். நிவாரண முகாமில், முதலமைச்சர் மக்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். மேலும், திருத்துறைப்பூண்டியில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்தார்.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் ஆய்வை முடித்த பின் தற்போது செய்தியாளர்களை சந்தித்தினார். அப்போது அவர் கூறியதாவது, 

கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.  தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நாகையில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.


 
பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில், 1 லட்சம் கான்கிரீட் வீடுகள் உடனடியாக  கட்டித்தரப்படும் . மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்.  

பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பைகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைவருக்கும் வழங்கப்படும். இன்னும்  5 நாட்களுக்குள் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக வழங்கப்படும் 
 
புயல் பாதித்த பகுதிகளில் மருத்துவ குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. 415 முகாம்களில் 2 லட்சத்து 85 ஆயிரம்பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.  



இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamil nadu cm eps in nagai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->