சிலை கடத்தல் வழக்கு! டிவிஎஸ் நிறுவன தலைவருக்கு ஆதரவாக தமிழக அமைச்சர்! - Seithipunal
Seithipunal


ஸ்ரீரங்கம் கோயில் சிலை திருட்டு தொடர்பான வழக்கில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமின் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவருக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் டிவிஎஸ் தலைவர் வேணு சீனிவாசன் அவர்களை கைது செய்ய மாட்டோம் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ள நிலையில் ஸ்ரீரங்கம் கோவிலின் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவரும் டிவிஎஸ் நிறுவனத் தலைவருமான வேணு சீனிவாசன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் இவர் முன் ஜாமீன் கேட்டது ஆச்சரியமாக உள்ளதாகவும், இவர் சிலை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டு இருக்க மாட்டார் என்று தனிப்பட்ட முறையில் நம்புவதாகவும் தமிழக அமைச்சர் மாபாய் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.  அதேபோல மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் டிவிஎஸ் நிறுவனத் தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் வாங்கியது தேவையில்லாதது. அவர் இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கமாட்டார் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்

English Summary

statue issue tamil minister support tvs venu srinivasan


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal