திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்! ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்! பழம் நழுவுமா?! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வந்த நிலையில், ஏறக்குறைய கூட்டணி கட்சிகள், எந்த அணியில் இணையும் என்பது உறுதியாகி விட்ட நிலையில், இன்னும் தேமுதிக மட்டும் இந்தப்புறம், அந்தப்புறம் என்ற முறையில் ஆட்டம் காட்டி வருகிறது. 

பாஜக தரப்பில் தொடர்ந்து தேமுதிகவுடன் பேசப்பட்டு வந்த நிலையில், தாங்கள் பெரிய கட்சி என்ற நினைப்பில் அதிக அளவிலான தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நான்கு  நாட்களாக நடந்த பேச்சுவார்த்தை தற்போது சம்மதம் இல்லாமல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கிடையே தேமுதிக சார்பில் கூட்டணி பேசுவதற்கு அமைக்கப்பட்ட குழுவினருடன் பொதுச்செயலாளர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். 

ஆலோசனை நடத்திய பிறகு தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து அவருடைய உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும், பின்னர் இது முழுக்க முழுக்க அரசியல் கூட்டணி பேச்சுக்காக தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான் எனவும் திருநாவுக்கரசர்  அறிவித்தார். 

இந்நிலையில் திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுகவால் தேமுதிக எதிர்பார்ப்பதை கொடுக்க முடியுமா என்பது சந்தேகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தேமுதிக இரட்டை இலக்கில் தொகுதியை கேட்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் விஜயகாந்தை சந்திக்க திமுக தலைவர் முக ஸ்டாலின் செல்வதாக தகவல் வந்துள்ளது. இந்த முறையாவது பழம் பாலில் விழுமா என பார்ப்போம்! . கடந்த முறை விட்ட பழத்தை பிடிக்க விரைந்துள்ளார் ஸ்டாலின்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin will meet vijayakanth


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->