சிண்டு முடியுற வேலை எல்லாம் வேணாம்! ஸ்டாலின் கற்பனையில் வாழட்டும்! அதிரடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal



அ.தி.மு.க.,வில், தற்போது முதலமைச்சராக  பழனிசாமி இருந்தாலும், கட்சியில் ஒருங்கிணைப்பாளராக  துணை முதல்வர் பன்னீர் செல்வம், தான் உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் இபிஎஸ் ஆதரவாளர் களிடையே மோதல் அதிகரித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் கொடுக்கும்படி, ஓபிஎஸ்க்கு அவரது ஆதரவாளர்கள், நெருக்கடி கொடுத்து வருகின்றனர். இதனால் இபிஎஸ் தரப்பில் அதிர்ச்சியடைந்துள்ளனர். அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், இதுவரை ஆதரவாளர்கள் இடையே, இணைப்பு ஏற்படவில்லை. இதனால் அவ்வப்போது புகைச்சல் இருந்து வருகிறது. 

கூட்டுறவு சங்கத் தேர்தலில், ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு, பதவிகள் வழங்கபடவில்லை, கட்சியிலும் பொறுப்புகள்  வழங்கப்படவில்லை. இது, அவர்களிடம் கடும்  அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்களின் அதிரடி எதிர்ப்பு நடவடிக்கைகள்,முதல்வர் இபிஎஸ்  தரப்பினரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஓபிஎஸ் இபிஎஸ் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லையென்றால்  கட்சியில் எந்த நேரத்திலும் பிளவு ஏற்படலாம் என, கட்சியின் முன்னணி  நிர்வாகிகளே பேசிப்பதாக தகவல்கள் வருகின்றன. 

இதுகுறித்து சென்னையில் அமைச்சர் பேசுகையில் முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல் எதுவும் இல்லை என்றும், இங்கே யாரும் சிண்டு முடியும் வேலைகளை பார்க்க வேண்டாம் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  காவிரி வழக்கு தீர்ப்புக்கு எந்த அரசும் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார். நீரை திறக்கும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உண்டு எனவும் அவர் தெரிவித்தார். 

மு.க ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார். அவர் அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துகொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தை தினமும் நடத்திவருகிறார். காவிரி உரிமை நிலைநாட்டப்பட்டிருப்பதை ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin live in dream world said by jayakumar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->