ஒற்றை கேள்வியால் மோடியை அதிரவைத்த ஸ்டாலின்....என்ன செய்ய போகிறார்?! - Seithipunal
Seithipunal


சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி தான் பழமையான தொன்மையான மொழி என்று தெரிவித்த பிரதமர் மோடிக்கு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சில கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி தான் பழமையான தொன்மையான மொழி. ஆனால் நான் தமிழை கற்காததை நினைத்து மிகவும் வருந்துகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

அதற்கு சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையான மொழி என்பதை ஒப்புக்கொண்ட பிரதமரின் இத்தகைய கருத்தை தான் வரவேற்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அது உண்மை என்றால் சில நிபந்தனைகளையும் விதித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது, சமஸ்கிருதத்தை விட தமிழ் பழமையானது" என்ற பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் கருத்தை வரவேற்கிறேன். தமிழ்மொழியைப் பற்றி அறிந்து உணர்ந்து அவர் அறிவித்திருக்கும் கருத்து அவருடைய மனசாட்சிக்கு உண்மையெனில், தமிழை மத்திய ஆட்சி மொழியாகவும், உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகவும் அறிவிக்க வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், தாய்மொழியாம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு, சமஸ்கிருதத்திற்கு இணையாக நிதி ஒதுக்கீடு செய்து, உலகப் பொதுமறையாம் திருக்குறளை "தேசிய நூலாக" அறிவிக்க வேண்டுமெனவும் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். என்று பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin asked question for modi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->