இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! - Seithipunal
Seithipunal


இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை தற்போது வழங்கி உள்ளது. 

இலங்கை நாடாளுமன்றம் கடந்த மாதம் நள்ளிரவிவில் கலைக்கப்பட்டது. இதை எதிர்த்து ரணில் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ரணிலின் ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட இலங்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவு செல்லாது என இலங்கை உச்சநீதிமன்றம்  அதிரடியாக தெரிவித்தது.  

மேலும், இந்த நிகழ்வானது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Srilanga case Supreme Court New judgement


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->