கர்நாடக அரசியலில் புதிய திருப்பம்.! அதிரடியாய் அறிவித்த சித்தராமையா.!! தனது வாக்குறுதியில் தடம் மாறுகிறாரா சித்தராமையா..?!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற தேர்தலில், பாஜக 104 இடங்களிலும் ,காங்கிரஸ் 78 , மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வெற்றிபெற்றது. 

பாஜக அதிக தொகுதியில் வெற்றி பெற்றதால் , அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, கர்நாடக ஆளுநரை சந்தித்து உரிமை கோரி மே 17 ஆம் தேதி முதல்வராக பதிவியேற்றார் . பின்னர்  பதவியேற்ற பிறகு அவர் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவருக்கு அவகாசம் கொடுக்கப்பட்டது. 

ஆனால் காங்கிரஸ் கட்சியினர் இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் 48 மணி நேரத்திற்குள் பெரும்பான்மையை நீரூபிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால்  கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் பாஜக தனது பெரும்பான்மையை நிரூபிக்காததால் எடியூரப்பா பதவி விலகினார். 

இதையடுத்து காங்., ம.ஜ.,த கூட்டணி அமைந்தது. நீதிமன்ற உத்தரவை அடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று முதலமைச்சராக குமாரசாமி பதவியேற்றார். சமீபத்தில் காங்கிரஸ், மஜத அமைச்சர்கர்களுக்கு இலாகாக்கள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது வரை முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எந்த ஒரு பதவியும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து, மஜத-காங்கிரஸ் அரசின் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா நியமிக்கப்பட்டுள்ளார். 

அடிக்கடி இவர்களுக்குள் கருத்து மோதல்கள் இருந்தாலும் பிளவு ஏற்பட வாய்ப்பில்லை என்றே அம்மாநில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் நேற்று (21.07.2018) காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்த கூட்டத்தில் பேசிய சித்தராமையா, ''வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் தங்களை புதுப்பித்து கொள்ளுங்கள். அப்போது தான் வரும் தேர்தலைச் சிறப்பான முறையில் எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.'' என ஆலோசனை வழங்கினார்.

பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, ''வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை. அந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முழுமையாக தீர்மானிக்கவில்லை.'' என தெரிவித்தார். இவரின் இந்த அறிவிப்பு போட்டியிட்டாலும், போட்டிடுவேன் என்பது போலவே உள்ளதால் கர்நாடக அரசியலில் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, இது தான் தன்னுடைய கடைசி தேர்தல் என்றும் இனி வரும் எந்தத் தேர்தலிலும் தான் போட்டியிட போவதில்லை என்றும் சித்தராமையா தெரிவித்திருந்தார். தற்போது அறிவித்திருப்பது, வரும் தேர்தலில் போட்டியிட்டால் என்ன? என்பது போல் அவரி இந்த அறிவிப்பு உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SIDHRAMAYA OPEN TALK ABOUT LOK SABHA ELECTION


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->