அடுத்த ட்விஸ்ட்.! செந்தில் பாலாஜி வழக்கு விசாரணை அதிகாரிக்கு திடீர் டிரான்ஸ்பர்.! - Seithipunal
Seithipunal


அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து கழகத்தில் வேலை பெற்று தருவதாக கூறி பலரிடம் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு வேலை வழங்கவில்லை என புகார் எழுந்ததை அடுத்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கில் சென்னை குற்றப்பிரிவு துணை காவல் ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பணம் திருப்பி கொடுக்கப்பட்டதால் செந்தில் பாலாஜியை விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற தொடரப்பட்ட வழக்கில் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி 2 மாதத்திற்குள் அறிக்கையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த அனுமதி வழங்கியும் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தற்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாத காலம் அவகாசம் வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மீதான விசாரணையின் போது செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தமிழக காவல்துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய காலக்கெடு நிறைவடைய இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் இந்த வழக்கை கடந்த 2 வருடங்களாக விசாரணை செய்து வந்த சென்னை குற்றப்பிரிவு துணை ஆணையர் திருமதி.நாகஜோதி நேற்று இரவு திடீரென பணியிட மாற்றம் செய்யப்பட்டு குற்றப் பதிவுப் பணியகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி செந்தில் பாலாஜியின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது "ஆறு மாத கால அவகாசம் கேட்பது முற்றிலும் நியாயமற்றது என்று அரசு வழக்கறிஞர் குப்தாவிடம் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.

மேலும் செப்டம்பர் 30 கால அவகாசம் நீட்டித்ததோடு இந்த உத்தரவுகள் பின்பற்றப்படவில்லை என்றால் நீதிமன்றமே விசாரணை குழு அமைக்கும் என எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் தான் தமிழக அரசு செந்தில் பாலாஜியின் வழக்கை ஆரம்பம் முதல் விசாரணை நடத்தி வந்த  நாகஜோதியை பணியிட மாற்றம் செய்துள்ளது.

செந்தில் பாலாஜி வழக்கில் நாகஜோதியிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிய துணை கமிஷனர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் காலக்கெடுவான செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் உண்மைகளை ஆய்வு செய்து விசாரணையை முடிக்க வேண்டும். செந்தில் பாலாஜி மீதான வழக்கை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாகக் கண்காணித்து வரும் நிலையில், செந்தில் பாலாஜியின் வேலை மோசடி மோசடியில் இருந்து முதன்மை விசாரணை அதிகாரியாக பணியாற்றி வந்த வரை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்துள்ளது. இதனால் வேலை மோசடி வழக்கில் புகார் அளித்தவர் நாகஜோதியின் பணியிட மாற்றத்தை மேற்கோள் காட்டி சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SenthilBalaji case investigation officer nagajothi has been transferred


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->