அதிமுகவை பொறுத்தவரை மோடி இதுதான்.......அமைச்சர் செல்லூர் ராஜூ அசத்தல் பேட்டி! - Seithipunal
Seithipunal


அ.தி.மு.கவுக்கு தந்தையும், தாயும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மட்டும்தான் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

மேலும் அ.தி.மு.கவை பொறுத்தவரை பிரதமர் மோடி என்பவர் நண்பர்தான் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இ.பி.எஸ்-ஓ.பிஸ் இணைப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே இதுகுறித்து அ.தி.மு.க அமைச்சர்கள் தொடர்ந்து விளக்கமளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில்,  சட்டசபையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

மேலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதற்காக ஒன்றும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தவில்லை என்றும் அ.தி.மு.கவை பொறுத்தவரை பிரதமர் மோடி எங்களுடைய நண்பர் மட்டுமே என்றும் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

அ.தி.மு.கவுக்கு தந்தையும், தாயும் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் மட்டும்தான் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sellur raju speech about modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->