மார்ச் 30 -சசிகலா & தினகரன் அரசியலில் அடுத்தகட்ட நகர்வுக்கு திட்டம்.! - Seithipunal
Seithipunal


சசிகலா வீட்டைச் சுற்றியுள்ள இடங்களிலும், தெருக்களிலும் உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.இந்நிலையில் சடங்குகள் முடித்து நேற்று சசிகலா, தினகரன் உட்பட அனைவரிடமும் ஆலோசனையில் ஈடுபட்டார்.அதில்  வரும் 30-ம் தேதி சசிகலா கணவர் நடராஜனுக்குப் படத் திறக்க  முடிவு செய்யப்பட்டுள்ளது.படத்திரப்பானது நடராஜன் வருடாவருடம்  பொங்கல் விழாவை நடத்தும் தஞ்சை தமிழரசி மண்டபத்திலேயே  நடத்தத் முடிவு செய்திருக்கிறார்கள்.

Image result for natarajan funeral

இந்த நிகழ்சியில் எல்லா கட்சியை சேர்ந்தவர்களையும்  பங்குபெற வைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளாராம்  சசிகலா.இதில் அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கலாம் என்று சம்மதம் கூறிவிட்டாராம். சின்ன சின்ன கட்சி,அமைப்புகளைக் கூட தவிர்க்க வேண்டாம் என்று குறியுள்ளாராம் சசிகலா. இதனால்  தினகரன் நேற்று முதலே சில தலைவர்களுடன் பேசிவருகிறார். 

Image result for all political leaders in tamilnadu

படத் திறப்பு நிகழ்ச்சியை குடும்ப நிகழ்வாக இல்லாமல் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான  கூட்டணி ஒருங்கிணைப்புக்கான அச்சாரமாக மாற்ற வேண்டும் என சசிகலா இப்போதைக்கு திட்டமிட்டுள்ளார்.இந்நிகழ்ச்சியில் எந்த வித அரசியலும் பேசாமல் நிகழ்ச்சிக்கு வருகிறவர்கள் அனைவரும்  அரசியல் ரீதியாக அவர்களோடு இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க  கணக்குப் போட்டுள்ளார் சசிகலா.

இதனால் ADMK வின் எடப்பாடி, பன்னீர் அணி, பாஜக முதலிய  கட்சிகள் தவிரித்து மீதமுள்ள திமுக உள்ளிட்ட எல்லா கட்சிப் பிரதிநிதிகளையும் நடராஜன் படத் திறப்பு நிகழ்ச்சிக்கு வரவைக்க வேண்டும் என்பது சசிகலாவின் உத்தரவு.

Image result for dinakaran

இந்நிலையில் நேற்று தஞ்சையில்  தினகரன் கூறியதாவது 
‘’ வருகின்ற 30-ம் தேதி  நடராஜன் படத் திறப்பு நிகழ்ச்சி காலை சுமார் 10 மணிக்கு நடைபெறும். அவருடன் எவரெல்லாம்  நெருக்கமாக இருந்தனரோ அவர்கள் அனைவரையும் தொடர்புகொண்டு பங்கேற்குமாறு பேசி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sasikala and dinakarn planned to move next step in politics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->