அடுத்த மாதம் கலைகட்டும் ஆர்.கே நகர்..!! அதிகாரிகள் வட்டாரத்தில் வலம் வரும் ரகசிய தகவல்..! அங்கே சொன்ன கையோடு, இங்கே ஆட்டம் ஆரம்பம்..! - Seithipunal
Seithipunal


கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் சட்டசபைக்கான பொதுத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குகள் பதிவாகின என்பது தெரிந்த ஒன்றே

அங்கு ஏன் குறைவாக வாக்குகள் பதிவானது என்பது பற்றிய ஆய்வை  எலெக்க்ஷன் கமிஷன் நடத்த தொடங்கி உள்ளது.

தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கான பணிகள் தொடங்கிவிட்டன..

அதோடு, இதுபோன்ற வாக்குச்சாவடிகள் அடங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடம் மாறிவிட்டார்களா? அல்லது அங்கு தான் இருந்தாலும், தேர்தலில் ஓட்டு போட வரவில்லையா? என்பது பற்றிய ஆய்வை ஒரு குழு நடத்தி வருகிறது..

சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் 10 வாக்குச்சாவடிகளில் 25 சதவீதத்துக்கும் குறைவாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இதுபற்றியும் ஆய்வு நடத்தப்படுவதாக  எலெக்க்ஷன் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதனிடையே குஜராத்  மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட உள்ளது. டிசம்பரில் அங்கு தேர்தல் நடத்தப்படும் என எலெக்க்ஷன் கமிஷன் கூறியுள்ளது..

அதற்கான அறிவிப்பை நவம்பர் மாதம் இந்திய எலெக்க்ஷன் கமிஷன் அறிவிக்கக்கூடும். அப்போது சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் தேதியும் அறிவிக்க அதிக சான்ஸ் உள்ளதாக  எலெக்க்ஷன் கமிஷன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RK nagar bi election issue and date fir election


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->