ஸ்கூட்டர் கொடுப்பதே இதற்குத்தானா?......தமிழச்சிக்கு ஸ்கூட்டர்.....தமிழனுக்கு குவாட்டர் : அனல் பறக்க வைத்த இவர்! - Seithipunal
Seithipunal


தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் இதை மட்டும் தான் தமிழக அரசு உறுதியாக தந்திருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். 

கரூர் மாவட்டத்தல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு கூறியதாவது, சண்டை போட்டுக் கொண்டு ஒருவர் ஜெ., சமாதியின் முன்பு போய் அமர்ந்தார். அவர் தமிழகத்திற்கு ஏதோ செய்யப்போகிறார் தமிழகத்தில் நிச்சயம் ஏதோ ஒரு மாற்றம் வரும் என்று ஒரு புள்ளி தெரிந்தது, ஆனால் அவ்வாறு ஒன்றுமே நடக்கவில்லை. 

தமிழ்நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவதற்காக நீ பெரியவனா, நான் பெரியவனா உன்னுடைய வேஷ்டியை நான் கிழிக்கிறேன் எனது வேஷ்டியை நீ கிழித்துப் பார் என்று சண்டைபோட்டவர்கள். பின்னர் திடீரென ராமன் லட்சுமணன் போன்று பதவியை பங்கிட்டுக் கொண்டு லூட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

மக்களுக்கு எது நல்லது என்று இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் இருவருமே நினைக்கவே இல்லை. தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி இருந்த காலகட்டத்தில் மக்களின் வசதி எப்படி இருந்தது தற்போது எப்படி இருக்கிறது. எத்தனையோ நல்ல நலத்திட்டங்களை இக்கூட்டணி தந்துள்ளது.

வேலைவாய்ப்பு, தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு திட்டம் என்று எத்தனையோ திட்டம் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இன்றைய நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு இருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரான பிறகு செய்திருக்கும் ஒரே விஷயம் என்னவென்றால் அது தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் இவை மட்டும் தான் உறுதி. 

ஸ்கூட்டரும், குவாட்டரும் தருவதற்கு உங்களைத் தேர்ந்தெடுப்பார்களா, முதலில் இவர்களை மக்கள் யாரும் தேர்ந்தெடுக்கவில்லை, இவர்களே இவர்களை தேர்ந்தெடுத்துக் கொண்டனர்.

முதலில் பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுப்பதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர்களது முன்னேற்றத்தை காட்டுவதற்காக இல்லை. கணவன்மார்கள் பலரும் டாஸ்மாக்கில் குடித்துவிட்டு சாலையில் விழுந்து கிடக்கிறார்கள், எனவே அவர்களை வீட்டிற்கு அழைத்து செல்ல பெண்களுக்கு மிகவும் கஷ்டமாக இருப்பதால் அவர்களை 
அந்த ஸ்கூட்டரில் உட்கார வைத்து அழைத்து செல்வதற்காகவே தமிழக அரசு ஸ்கூட்டரைத் தருகிறது என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

reason for giving scooter


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->