பரபரப்பிலும் கூலாக ட்வீட் செய்த டாக்டர்!! திமுகவை இதற்கு மேல் டேமேஜ் செய்ய முடியாது!! - Seithipunal
Seithipunal


அதிமுக-பாமக மற்றும் பாஜக தேமுதிக கட்சிகளின் கூட்டணி முடிவுகள் வெளியாகி தமிழக அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்துள்ளது. மேலும், அந்தந்த கட்சிகளின் தொகுதி பங்கீடு விவரங்களும் அடுத்தடுத்து வெளியாகியது.

அதில் பாமகவுக்கு 7 தொகுதிகளும், பாஜக மற்றும் தோழமை கட்சிகளுக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் கொரட்டூரில் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்று உள்ளார்.

திமுகவின் தொகுதி பங்கீடு குறித்து இன்று மாலை தகவல் வெளியாக உள்ள நிலையில், நேற்று பாமக அதிமுகவின் கூட்டணி உறுதி செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வரம்புமீறிய வார்த்தைகளால் விமர்சித்து இருந்தார். 

இந்த வார்த்தைகள் பாமக அவருடன் கூட்டணியில் இல்லை என்கிற ஆதங்கத்தில் தான் வருகிறது என பலர் விமர்சித்து வருகின்றனர். மேலும், நேற்று வரை பாமகவுக்கு திமுகவில் சீட் ஒதுக்கப்பட்டு இருந்தது என திமுக நிர்வாகிகளே நேற்று நடந்த விவாத நிகழ்வில் ஒப்பு கொண்டிருந்தனர். 

இது, உண்மையில் பாமக கூட்டணிக்கு வரவில்லை என்பதனால் தன் ஸ்டாலில் இப்படி தரக்குறைவான வார்த்தை பயன்படுத்தி பாமகவை விமர்சிக்க காரணமோ என நினைக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இந்நிலையில், நேற்று கூட்டணி பற்றிய முடிவு வெளியானதில் இருந்து பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மிகவும் கூலாக ட்வீட்டுகளை வெளியிட்டு வருகிறார்.

அது திமுகவின் ஆதங்கத்தை 'பொறாமை'என குறிப்பிடுகிறாரோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழவே செய்கிறது. அவரது ட்வீட்டுகள் பின்வருமாறு:- 




"பொறாமை என்பது ஒரு மனப் புற்றுநோய்! என்று" அவர் கூறியிருப்பது திமுக ஸ்டாலினின் ஆதங்க மனப்பான்மையை சுட்டிக்காட்டுகிறதோ? என இணையதள விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramadoss tweet about Dmk stalin


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->