ரசிகர்களுக்கு, ரஜினிகாந்த் கடும் எச்சரிக்கை! வெளியான புதிய உத்தரவால், அதிர்ச்சியில் ரசிகர்கள் !! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த 2017 டிசம்பர் 31-ந் தேதி அதிரடியாக அறிவித்தார். மேலும்,  அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்தார். அதை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தை, ரஜினி மக்கள் மன்றம் என பெயர் மாற்றம் செய்தார். 

இதையடுத்து, பதிவு செய்யப்பட்ட ரசிகர் மன்றங்கள், பதிவு செய்யப்படாத ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைக்கவும், ரசிகர்களின் உறவினர்கள், பொதுமக்களை ஒருங்கிணைத்து ஒரே குடைக்குள் கொண்டு வருவதற்காக ரஜினி மக்கள் மன்றம் என்ற இணையதளத்தையும்,மொபைல் 'ஆப்'பையும் ரஜினி தொடங்கினார்.

இதனிடையே, நடிகர் ரஜினி, தனது படத்தின் புரமோஷனுக்காக தான் அரசியலுக்கு வருவதாக அவ்வப்போது அறிவித்து வருகிறார் என பலர் குற்றம் சாட்டினார். கடந்த 15 வருடங்களாக ரஜினி அரசியலுக்கு தான் வரப்போவதாக அறிவித்து வருகிறார். ஆனால், இதுவரை கட்சி ஆரம்பித்த மாதிரி தெரியவில்லை என அரசியல் விமர்சர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் சேர்க்க கூடாது என ரஜினிகாந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், வாட்ஸ்அப் குழுவிற்கு ரஜினி மக்கள் மன்றம் என்று மட்டுமே பெயர் வைக்க வேண்டும் எனவும் ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

RajiniKanth New Statement


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->