விஜயகாந்துடன், ரஜினி திடீர் சந்திப்பு! வெளியான காரணம்!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், தேமுதிக தலைவருமான  விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக தனது மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தது.

இதற்கிடையே, விஜயகாந்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும், அவர் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அதனால் மிகுந்த வருத்தம் அடைந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், அவர் உடல் நலத்துடன் இருக்கிறார். வெற்றிகரமாக சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் முற்றிலும் குணமாகி  சென்னை திரும்புவார். தயவுசெய்து இதனை போன்ற வதந்திகளை பரப்பாதீர் என்று கூறியிருந்தார். 

இதனை தொடர்ந்து விஜயகாந்த் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் மற்றும் அவரது திருமண நாள் கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

மேலும் விஜயகாந்த் உடல் நலம் முழுவதும்  தேறி, புதிய வேகத்துடன் அரசியலில் மீண்டும் களமிறங்க வேண்டும் என்று அவரது தொண்டர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி என்ற செய்திகள் வெளிவந்த நிலையில் விஜயகாந்த்  சென்னை வந்த பின்பு நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பார் என்று  கூறப்பட்டது. 

இதற்கிடையே விஜயகாந்த் சிகிச்சை முடிந்து  சில நாட்கள் முன்பு சென்னை திரும்புகிறார். அவர் வருகை தேமுதிக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதன் பிறகு பல அரசியல் தலைவர்கள் நலம் விசாரித்தனர்.

இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini meet about vijayakanth


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->