பாஜக தொண்டர்களின் நெஞ்சை ஒரு நிமிடம் உறையவைத்த ராகுல் காந்தியின் ட்வீட்.!! பாஜக தொண்டர்களின் மனதை வென்ற ராகுல் காந்தி.!! - Seithipunal
Seithipunal


மத்திய நிதியமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி நிதியமைச்சராக, 2014ல், பொறுப்பேற்றபின், உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்காக தனியார் மருத்துவமனையிலும், அதன்பின், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றார்.

இதற்கிடையே, அருண் ஜெட்லியை பரிசோதித்த, எய்ம்ஸ் மருத்துவைமனை டாக்டர்கள், அவர், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். 'நோய் தொற்று ஏற்படும் என்பதால் வெளியில் செல்ல வேண்டாம்' என, ஜெட்லியிடம், டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

இது குறித்து முன்பு அவர் கூறுகையில், சிறுநீரக நோய்த்தொற்று தொடர்பான பிரச்னைகளுக்காக நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். இதனால், வீட்டிலிருந்தபடியே அலுவலக வேலைகளைக் கவனித்து வருகிறேன். அடுத்தகட்டமாக எனக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் முடிவு செய்வார்கள் என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அவர்கள் சிகிச்சைக்காக, அமெரிக்கா சென்றுள்ளார். பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று பாஜக மட்டுமில்லாது, மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் அவர் பூர்ண உடல் நலம் பெற வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில், ''மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாய் அறிந்து வருத்தம் அடைந்தேன். கொள்கைகளின் அடிப்படையில் மோதிக்கொண்டு இருந்தாலும், நானும், காங்கிரஸ் கட்சியும் அருண் ஜெட்லி அவர்கள் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் உங்களுடனும் உங்கள் குடும்பத்தினருடனும் 100 % துணையாக நாங்கள் இருப்போம்” என்று பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தியின் இந்த டிவிட் பாஜக தொண்டர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul twit about arun jetlly


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->