சத்தியமாக மோடிக்கு ஓட்டு போடுவேன் என சொன்னால் 20 சதவீதம் ஆஃபர்.! புதிய அறிவிப்பை வெளியிட்ட பா.ஜ.க.!! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் நெருக்கும் நிலையில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் கடுமையாக போட்டி போட்டுக்கொன்று தயாராகி வருகிறது. 

இந்நிலையில் இணையதளத்தில் ஒரு புகைப்படம வெளியானது அதில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பா.ஜ.க கையில் எடுத்திருக்கும் "மீண்டும் மோடி" பிரச்சாரத்தின் லோகோ மற்றும் பிரதமர் மோடியின் போட்டோ ஒரு துணிப்பை அச்சடிக்கப்பட்டுள்ளது. 

அந்த துணிப்பையில் நீங்கள் எந்த பொருளை வாங்கினாலும் பிரதமர் மோடிக்கு தான் வாக்களிப்பேன் என நீங்கள் சத்தியம் செய்தால் உங்களுக்கு அந்த பொருளின் விலையில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என அச்சிடப்பட்டுள்ளது. 

இந்த துணிப்பை எந்த கடைக்காக அச்சடிக்கப்பட்டது என் தகவல் இதுவரை வெளிவரவில்லை. எனினும் தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் இது போன்ற பிரச்சாரங்களை செய்ய எந்த வித சட்ட பிரச்சனையும் இருக்காது. எனினும் இதில் இந்தி வாசகங்கள் அச்சடிக்கப்பட்டதால் வடமாநிலத்தில் உள்ள ஒருகடைக்காக தயார் செய்து இருக்கலாம்.

ஆனால் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டால் தேர்தல் நடத்தைவிதிமுறைகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பின் இது போன்ற விற்பனை செய்ய முடியாது. அது குற்றமாகும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

promise to vote modi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->