நிர்மலாதேவி வழக்கில், தமிழக அரசு கடும் எதிர்ப்பு! நீடிக்கும் சிக்கல்!  - Seithipunal
Seithipunal


பேராசிரியை நிர்மலாதேவி தனியார் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு உடந்தையாக இருந்தததாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்கள். 

இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில்  சி.பி.சி.ஐ.டி. போலீசார் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் பேராசிரியை நிர்மலாதேவி, எங்கள் மீது அரசு தரப்பு கூறும் குற்றச்சாட்டுகளில் எவ்வித முகாந்திரமும் இல்லை. அதனால் வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மனு ஒன்றினை தாககல் செய்தார். நிர்மலா தேவியை போலவே இதே கோரிக்கையை வலியுறுத்தி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் மனு செய்தனர்.

இவ்வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசரனியின் போது நிர்மலாதேவியை வழக்கில் இருந்து விடுவிக்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறபடுகிறது. 

அரசின் எதிர்ப்பை அடுத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய நிர்மலாதேவியின் மனுவை  நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேபோல முருகன், கருப்பசாமியின் மனுவும் தள்ளுபடி செய்யபட்டது. தொடர்ந்து இந்த வழக்கின் மூல விசாரணையை இந்த மாதம் 7-ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கில் நிர்மலாதேவி சிறையிலே வைத்து விசாரிக்கப்பட்டாலும் இதுவரை எவ்விதமான உண்மையும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

professor nirmala devi case


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->