வாரணாசியில் மோடியை எதிர்க்காத பிரியங்கா காந்தி! ராகுல் காந்தியின் அசத்தல் திட்டம்!  - Seithipunal
Seithipunal


நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கடந்த முறை போட்டியிட்ட அஜய் ராய் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார் என்று காங்கிரஸ் கட்சியை உறுதிப்படுத்தியுள்ளது. 

இதன் மூலம் பிரியங்கா காந்தியின் தேர்தல் அரசியல் பிரவேசமானது சற்று தாமதம் ஆகியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது, ஆரம்பம் முதலே வாரணாசி தொகுதியில் பிரியங்கா காந்தியை நிற்க வைக்கும் எண்ணம் காங்கிரஸ் கட்சிக்கு  இல்லை எனவும், ஒரு பரபரப்புக்காக மட்டுமே அவ்வாறு பேசப்பட்டதாகவும், மேலும் முதன் முறையாக தேர்தலில் களமிறங்கும் பிரியங்கா காந்திக்கு சவாலான தொகுதியை கொடுத்து அவருடைய வெற்றி வாய்ப்பினை சிக்கலாக்கி விடக்கூடாது என்பதால் அவரை வாரணாசியில்  நிறுத்தும் எண்ணம் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

மேலும் பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் போட்டியிடுவாரா என்றால் நிச்சயமாக போட்டியிட மாட்டார் என்ற தகவல்களும் ஏறக்குறைய உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் அவர் இந்த தேர்தல் முடிந்ததும் நிச்சயம் தேர்தல் அரசியலுக்கு வருவார். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக பின்னர் தேர்வு செய்யப்படுவார், அதற்கான சூழல் கனிந்து வருவதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அப்படி என்ன திட்டம் உள்ளது என்று கேட்டால், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி, அமேதி என்பது காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ராகுல் காந்தி குடும்பத்தின் பாரம்பரிய தொகுதி ஆகும். இந்த தொகுதியில் வழக்கமாக அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்று வருவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவராக உள்ள ராகுல் காந்தியும், அமேதி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிடுகிறார்கள். இதுவரை ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட்டு வந்த ராகுல் காந்தி இந்தமுறை கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் இரண்டாவது தொகுதியாக தேர்ந்தெடுத்து போட்டியிடுகிறார். இதன் பின்னணியில் தான் பிரியங்கா காந்தி இருப்பதாக கூறப்படுகிறது. 

ஏனெனில் இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி வெற்றி பெற்றால் அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்யக் கூடும். அவ்வாறு அவர் வெற்றி பெறும் போது அவர் வயநாடு தொகுதியை தக்க வைத்துக் கொண்டு அமேதி தொகுதியை அதாவது தன்னுடைய குடும்ப பாரம்பரிய தொகுதியான அமேதியை, தன்னுடைய சகோதரி பிரியங்கா காந்திக்காக ராஜினாமா செய்வார் என்றும் அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடும் போது அவருடைய வெற்றி வாய்ப்பானது எளிதாக அமையும் எனவும் காங்கிரஸ் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

priyanka Gandhi election entry in ameti


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->