உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்த இந்தியா... குவியும் பாராட்டு! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி நேற்று அவசர அவசரமாக நாட்டு மக்களிடம் உரையாற்ற இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியது. இதனை தொடர்ந்து தற்போது நாட்டு மக்களிடம் உரையாற்றிய மோடி, " இந்தியா மிகப்பெரிய சாதனையை விண்வெளித்துறையில் நிகழ்த்தியுள்ளது.

மேலும், செயற்கை கோள் ஒன்றை விண்ணில் சுட்டு வீழ்த்தும் சோதனையிலும் வெற்றி அடைந்துள்ளது. இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சி தானே தவிர பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அது அல்ல.

விண்ணிலேயே செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும்,மிஷின் சக்தி என்ற சோதனை வெற்றிகரமாக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

விண்வெளி துறையில் உலகின் 4வது சக்தி மிகுந்த நாடு இந்தியா ஆகும். நாம் சொந்த செயற்கை கொலை தான் சுட்டு வீழ்த்தி உள்ளோம்" என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிந்துள்ளது. தனது வாழ்த்து செய்தியில், “மிஷன் சக்தி, இந்தியாவின் பெருமைமிகு தருணம். இந்த சோதனை, இந்தியாவின் விஞ்ஞான திறன் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகள்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “இந்த சோதனையை வெற்றிகரமாக நடத்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். நமது விஞ்ஞானிகளால் நாம் பெருமைப்படுகிறோம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

president congratulates drdo mission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->