ஓட்டு வங்கி இருக்கா? திமுகலாம் ஒரு துண்டு கட்சியா? அட கடவுளே.. பகிரங்க பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்தியில் தற்போது நடைபெறும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியை வீழ்த்தும் நோக்கில்., மாநில காட்சிகளை ஒன்றிணைக்க பல அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்கள் முயன்று வருகின்றனர். 

இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாளை கொல்கத்தாவில் சுமார் 30 இலட்சம் மக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணியானது நடைபெற உள்ளது. இந்த பேரணியில் பல கட்சிகளின் தலைவர்கள் ஓரணியில் இணைகின்றனர். இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களும் ஆதரவு தெரிவித்து கலந்து கொள்ள உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.


இதற்கிடையே, இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி ஆதரவு அளித்து தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், மதங்கள் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்த தனி மனிதனும்., குழந்தைகளுக்கு மதிப்பளித்து நாளைய இந்தியாவை உருவாக்க சக்தி வாய்ந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்று கூடியுள்ளது. பாராளுமன்ற ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாரத பிரதமர் மோடி அளித்த போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றத்தை சந்தித்த அனைவரும் ஓரணியில் திரண்டுள்ளனர். 

மோடியின் அரசு ஜனநாயகத்தை காப்பதாக கூறி தொடர்ந்து ஜனநாயகத்தின் தூண்களை அழித்து கொண்டு வரும் நிலையில்., சமூக நீதி மற்றும் மதசார்பின்மை பாதுகாக்கப்படவேண்டிய ஒன்று என்ற கோட்பாட்டின் மூலம் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வரவுள்ளது. இதற்க்காக நாளை ஓரணியில் திரளும் கட்சிகளுக்கும்., மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெறும் பேரணிக்கும் ஆதரவை தெரிவித்து கொள்கிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில், நாளை நடக்கவுள்ள பேரணி, துண்டு கட்சிகளின் பேரணியே மெகா கூட்டணியல்ல என்று பாஜகவின் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும், கொல்கத்தாவில் திமுகவிற்கு ஓட்டுவங்கி உள்ளதா?, இல்லை திரிணாமுல் காங்கிரசுக்கு தமிழகத்தில் தான் ஓட்டுவங்கி உள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PON RATHAKIRUSHNAN OPEN TALK ABOUT DMK


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->