இந்தியாவில் உள்ள மொத்த காவலர்களையும் தலைகுனியும்படி செய்த ஆறு காவலர்கள்! - Seithipunal
Seithipunal


வருகிற டிசம்பர் மாதம் தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து அங்கு தீவிர பிரசாரம் நடந்து வருகிறது. ஆளுங்கட்சியான தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி, தெலுங்கு தேசம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சியும், காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றனர்.

இந்த நிலையில் ராஷ்டீரிய சமிதி கட்சியினர், ஜெகீத் யாலா மாவட்டம் தர்மபுரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை தெலுங்கானா பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதே போல மஞ்கீர்யாலா தொகுதியிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 3 பேரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த காவல்துறையினரான நாராயண ரெட்டி, மதுபாபு, வெங்க டேஷ்வரராவ், ராமகிருஷ்ண ரெட்டி, ராம்பாபு என்பது தெரிய வந்தது. அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி முதலமைச்சர் சந்திரசேகரராவ் மகனும், மந்திரியுமான தாரகராமராவ் தெரிவிக்கும்போது, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் ஆந்திர காவல்துறையினர் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிறார்கள். ஆந்திர காவல்துறையினரின் தலைமை அலுவலகம் ஐதராபாத்தில் அமைந்திருக்கிறது. அங்கு செல்லாமல் தெலுங்கானா மாநில மைய பகுதியில் இருக்கும் தொகுதிகளில் ஆந்திர காவல்துறையினருக்கு என்ன வேலை இருக்கிறது என்றார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police supply money for votes


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->