அன்புமணி ஸ்டைலில் களமிறங்கிய இளைஞர்கள்! மக்கள் வரவேற்பு! - Seithipunal
Seithipunal


 

தமிழ்நாடு அரசால் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா சட்டம் , பல் பிடுங்கப்பட்ட லோக் ஆயுக்தா என பா.ம.க.,  சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் இளைஞர் அணியினர் விமர்சனம் செய்தனர்.  கோவை டாடாபாத் பகுதியில் நேற்று மாலை பா.ம.க., சார்பில் லோக் ஆயுக்தா சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அரசு அதிகாரிகள் மற்றும் . அரசியல்வாதிகள்  செய்யும் ஊழலை விசாரித்து உரிய தண்டனை அளிக்கும் வகையில் வலுவான லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது. 

இந்த  பொதுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியின் மாநில துணை செயலாளர் அசோக் ஸ்ரீநிதி, அந்த கட்சியின் இளைஞரணித்தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP 2016 ஆம் ஆண்டு வண்டலூர் மாநாட்டில் பேசியது மாதிரியான ஒரு மேடையை அமைத்து தனது பேச்சை தொடங்கினர். இந்த முறை அந்த பகுதி மக்களுக்கு ஆர்வமாகவும், வித்தியாசமாகவும் இருந்தது. 

லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவரை முதலமைச்சர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் ஆகிய 3 பேர் மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில், வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் மேலும் இந்த குழுவில்  உயர்நீதிமன்ற நீதிபதியை முக்கியமாக இணைக்க வேண்டும் என்றும் ஊழல்கள் வறுமையை அதிகப்படுத்துகிறது அதனால் லோக் ஆயுக்தாவை வலுவான ஒன்றாக அமைக்க வேண்டும் என்றும் கூறினார். 

ஆளும் கட்சியினர் ஊழல் குற்றத்தில் சிக்கினால் எப்படி தீர்வுகள் கிடைக்கும்..?. எனவே, லோக் ஆயுக்தாவின் உறுப்பினர்களை பொறுத்து தான் இந்த சட்டம் மூலம் பயன் கிடைக்குமா எனபது தெரிய வரும். புகார் அளிப்பது தொடர்பான இரகசியங்கள் காக்கப்பட வேண்டிய சூழலை இந்த லோக் ஆயுக்தாவில் கொண்டு வரவேண்டும் எனவும் போலி புகார் என்ற பெயரில் பொதுமக்களைப் புகார் அளிக்க அச்சுறுத்துவது போல உள்ள முரண்பாடுகளை மாற்ற வேண்டும் என்றும் பொதுக்கூட்டத்தில் பேசினார்.  இந்தக் கூட்டத்திற்கு ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk youth wing compaign for awarness of lok ayuktha in kovai


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->