தேர்தலுக்கு முன்பே மக்களின் மனதை வென்ற மத்திய சென்னை வேட்பாளர்! வெளியான வீடியோ!  - Seithipunal
Seithipunal


நம் இந்திய நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தலானது இந்தியா முழுவதும் தற்போது தொடங்கியுள்ளது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், அடுத்த கட்ட தேர்தல் தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. 

ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சாம் பால் அங்குள்ள மக்களின் மனங்களைக் கவரும் விதமாக செயல்படுவது அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. அந்த செயல் பாராட்டும் படியும் அமைந்துள்ளது. 

ஒவ்வொரு கட்சியினரும் பிரச்சாரம் செய்ய செல்லும்போது அங்கிருக்கும் மக்களும், தொண்டர்களும் வேட்பளர்களை வரவேற்க பட்டாசுகள் வெடிப்பது, மாலைகளை கொடுப்பது வழக்கமான ஒன்று தான். மேலும் அங்கே கூடியிருக்கும் மக்கள் பயன்படுத்தும் குடிநீர் மற்றும் உணவு பண்டங்களின் மிச்சங்களும் அங்கேயே விட்டுச் செல்வது வழக்கம் தான். பெரும்பாலும் இதுவரை அப்படி தான் பார்த்திருப்போம். 

பிரச்சாரம் முடிந்து முன்னே சென்றுகொண்டிருக்கும்போதே மூன்று பேரை நியமித்து, உடனடியாக தூய்மை படுத்தும் பணிகளை செய்து வருகிறார் சாம் பால். பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைகளான நாம் விரும்பும் சென்னை மற்றும் கடந்த தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட குப்பையில்லா தமிழகம் அதேபோல சுற்றுச்சூழலை மேம்படுத்த பசுமைத்தாயகம் அமைப்பின் மூலம் ஏற்படுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை மக்களுக்கு ஞாபகப்படுத்தும் விதமாக இந்த சுகாதார பணியும் அமைந்துள்ளது. 

அவர் செய்து வரும் இந்த செயலானது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப்பெற்றது. தேர்தலுக்கு முன்னரே மக்களின் மனதில் வென்றுள்ளார் மத்திய சென்னையின் பாமக வேட்பாளர் சாம் பால். அவரை எதிர்த்து போட்டியிடும், திமுக வேட்பாளர் தயாநிதி மாறன், SDPI வேட்பாளர் தெஹ்லான் பாகவி என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Candidate Sam Paul Activity During Election Campaign


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->