வலியுறுத்திய பாமக! தீர்மானம் போட்ட திமுக! உறுதிகொடுத்த அதிமுக! தமிழக அரசியலில் இப்படியும் நடக்குமோ!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் எந்த மொழிக்கும் இல்லாமல் சிறப்பம்சமாக தமிழ் மொழியில் ஆராய்ச்சி செய்வதற்காக செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமானது தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த தமிழாய்வு நிறுவனமானது தொடங்கப்பட்ட நாள் முதல் மற்ற மொழி பற்றாளர்களால்  இந்த நிறுவனத்தை மூடுவதற்கான சதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன பிறகும் இது வரை நிலையான நிர்வாக இயக்குனர் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொறுப்பு  நிர்வாகிகளாக மற்ற இடங்களில் பணிபுரிபவர்கள் நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு தமிழ் தெரியாது என்பது தான் துயரமான விஷயம். மேலும் இங்கு பொறுப்பு அலுவலர்களாக பணியாற்றிய முனைவர் செம்மொழி க ராமசாமிக்கு பிறகு எவ்வித பணியும் நடைபெறாமல் முற்றிலுமாக நிறுவனத்தின் செயல்பாடு முடங்கிவிட்டதாகவும், தமிழ் மொழியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தவில்லை எனவும், மேலும் மத்திய அரசு 25 கோடி நிதி வந்த நிலையில் தற்போது 2 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் எவ்விதமான பணிகளும் நடைபெறவில்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று குற்றம் சாட்டி இருந்தார். 

இன்று  இதுகுறித்து தமிழக சட்டசபையில் தமிழக எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்பொழுது இதே கேள்விகளை முன்வைக்க அதற்கு பதிலளித்து பேசிய தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன், நிலையான நிர்வாக இயக்குனர் இல்லை என்பது உண்மைதான் அதற்காக தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் நிர்வாக இயக்குனர் நியமித்து விடலாம் எனவும் மேலும் மூன்று மாதத்தில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் கட்டப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  மேலும் மத்திய அரசிடம் இருந்து எட்டு கோடி ரூபாய் நிதி வரவேண்டியுள்ளது அதனை வாங்கிவிட்டால் பணிகள் வேகமாக நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தமிழ் வளர்ச்சிக்கு இந்த ஆட்சி அதிகம் பாடுபடும் எனவும் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk admk dmk for tamil language


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->