சற்றுமுன் தமிழக வரலாற்றில் மாபெரும் அறிவிப்பு.!! தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மோடி.!!! - Seithipunal
Seithipunal


இன்று சென்னை வண்டலூர் அருகே நடக்கும் பிரதமர் மோடி தலைமையிலான பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் ஆளுநர், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், என்.ஆர் காங். தலைவர் ரங்கசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, ஏசி சண்முகம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்று உள்ளனர்.

பின்னர், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள எண்ணூர் திரவ எரிவாயு முனையத்தை நாட்டிற்கு பிரதமர் மோடி அவர்கள் அர்ப்பணித்தார். மேலும்,  ஈரோடு - கரூர், திருச்சி - சேலம் மற்றும் கரூர் - திண்டுக்கல் இடையே மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளை தொடங்கி வைத்தார்.

பின்னர் பொது கூட்ட மேடையில், தமிழக முதல்வர், துணை முதல்வர் அவர்கள் தங்களின் உரையை ஆற்றினார். 

இந்த பொதுக்கூட்ட மேடையில் உரையாற்றிய பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அவர்கள், பாமகவின் 10 கோரிக்கைகளான... 
1. காவிரி: காவிரி பாசன பகுதியை பாதுகாக்கப்பட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். 
2. தமிழ்நாட்டின் கோதாவரி உள்ளிட்ட முக்கிய 20 நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.
3. இடஒதுக்கீட்டை காக்க ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
4. ஏழு தமிழர்கள் விடுதலை.
5. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.
6. நீர்வளம் காக்க மணல் குவாரிகள் படிப்படியாக மூட வேண்டும்.
7. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்.
8. காவிரியில் மேகதாது அணைக்கு தடை.
9. வேளாண் கடன்கள் தள்ளுபடி மற்றும் உழவர் ஊதியக்குழு அமைத்தல்
10. நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு. முன் வைத்தார்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி அவர்கள், ''சென்னையில் உள்ள சென்ட்ரல் ரெயில் ஸ்டேஷன் இனி டாக்டர் எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்படும்'' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM MODI ANNOUNCE ABOUT CHENNAI CENTRAL NAME


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->