தலைதெறிக்க ஓடிய ஓபிஎஸ்.! எங்க ஓட்டு கேட்க வந்திங்களா., விரட்டி அடித்த மக்கள்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 5 நாட்களாக தமிழகத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வந்த கஜா புயலானது, நேற்று அதிகாலை தஞ்சை அருகே உள்ள அதிராம்பட்டிணத்தில் கரையை கடந்தது. 

கஜா புயல் கரையை கடக்கும் போது நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்து போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. 

கரையை கடந்த புயலானது திருச்சி, திண்டுக்கல், தேனீ, கேரளா-வின் கோட்டையும் வழியாக அரபி கடலை சென்று வலுவிழந்தது. புயல் என்ற பக்தையான திண்டுக்கல் மற்றும் தேனீ மாவட்டம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகியது. நேற்று கஜா புயல் காரணமாக தேனீ மாவட்டத்தில் கனமழை பெய்து பெரியகுளம் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. 

இந்நிலையில், தமிழக துணை ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற பொது, அந்த பகுதி மக்கள் அவரை உள்ள வர விடாமல் விரட்டி அடிக்க முற்பட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயற்சி செய்தனர்.

ஆனால், போலீசாரை தாண்டி அந்த பொது மக்கள் துணை முதல்வர் ஓபிஎஸ்-யை முற்றுகையிட்டு, ''எங்கள் பகுதிக்கு வரக்கூடாது'' என கோஷமிட்டு, இப்போது இங்கு எதற்கு வந்திங்க., இடைத்தேர்தல் வருவதால் ஓட்டு கேட்க வந்திங்களா என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போலீசார் கொந்தளித்த மக்களிடம் இருந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீட்டு பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

people against ops


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->