ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கும் மத்திய அமைச்சர்.! சம்மனை அனுப்பி அதிரவைக்கும் சி.பி.ஐ.!! - Seithipunal
Seithipunal


மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் அமைச்சரவையில் இருந்த சமயத்தில் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டை., ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கியது தொடர்பான குற்றசாட்டானது எழுந்தது. 

இந்த குற்றசாட்டு தொடர்பாக வழக்கை கையில் எடுத்த சி.பி.ஐ மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்., அவரது மகன் கார்த்தி சிதம்பரம்., ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் இந்திராணி முகர்ஜி ஆகியோரின் மீது வழக்குப்பதிவு செய்தது. 

இதனை எதிர்த்தும் தன்னை கைது செய்ய தடை விதிக்கூறியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வரும் ஜனவரி 15 ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. மேலும்., கைது செய்ய தடைதித்திருந்தாலும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. 

கடந்த மாதத்தில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ப.சிதம்பரம் ஆஜராகிய நிலையில்., மீண்டும் அவருக்கு சம்மன் வழங்கியுள்ளது. இதனை ஏற்ற ப.சிதம்பரம் நேற்று நடந்த விசாரணைக்கு ஆஜராகி அவர்கள் அளித்த வாக்குமூலத்தை பதிவு செய்தனர். 

இந்த வழக்கு மட்டுமல்லாமல் ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கிலும் ப.சிதம்பரம் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்தது குறிப்பிடத்தக்கது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

p.chidambaram money fraud case., cbi investigation going on


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->