இந்திய கிரிக்கெட்டில் இரட்டையர் விநோதம்! பாண்டியா, பதான் சகோதரர்களின் ஒற்றுமை!  - Seithipunal
Seithipunal


மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த இரு அணிகள் இடையே நடைபெற்ற  2 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி  2-0 என்ற கணக்கிலும், 5 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்றது. 

இதனை தொடர்ந்து இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் நேற்று  கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி போராடி வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய க்ருனால் பாண்டியா பங்கு முக்கியமானது. சிறப்பாக பந்து வீசிய அவர் 21 ரன்களையும் எடுத்து அணியை வெற்றி பெற செய்தார். 

இதுவரை இருபது ஓவர் போட்டிகளில் இந்தியா சார்பாக பதான் சகோதரர்கள் விளையாடி உள்ளார்கள். தற்போது பாண்டியா சகோதரர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த இரண்டு சகோதரர்களும் ஒரே உள்ளூர் அணியான பரோடாவில் இருந்து வந்தவர்கள். 

பதான் சகோதரர்களில் இளையவரான இர்பான் பதான் சர்வேதச போட்டிகளில் முதலில் அறிமுகமானார். மூத்தவரான யூசப் பதான் சில வருடங்களுக்கு பிறகே அணியில் இடம்பிடித்தார். 

பதான் சகோதரர்களை போலவே இளையவர் வேகப்பந்து வீச்சாளராகவும், மொத்தவர் சுழற்பந்துவீச்சாளராகவும் உள்ளார்கள். ஆனால் பேட்டிங்கில் பாண்டியா வேறுபாடாக மூத்தவர் இடது கை ஆட்டக்காரராகவும், இளையவர் வலது கை ஆட்டக்காரராகவும் உள்ளார்கள். 

பதான் சகோதரர்கள் சிறப்பாக விளையாடினாலும், தொடர் வாய்ப்புகள் இல்லாமல் அணியில் நீண்ட காலம் விளையாட முடியாமல் உள்ளார்கள். ஆனால் பாண்டியா சகோதரர்கள் இளம் வயது என்பதால் இந்தியா அணிக்கு நீண்ட காலம் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

English Summary

pandya pathan brothers coming from baroda

செய்திகள்Seithipunal