ஓபிஎஸ் யாகம் நடத்தியது எதற்கு தெரியுமா? பின்னணியில் தினகரனும், திமுகவும்! வெளியான அதிர்ச்சி தகவல்கள்!  - Seithipunal
Seithipunal


இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கின்னஸ் சாதனைக்காக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தினார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரலாற்று நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல அமைச்சர்கள் விராலிமலையில் முகாமிட்டனர். அங்கே துணை முதலவர் பன்னீர்செல்வம் ஆப்சென்ட் ஆனது பலரையும் யோசிக்க வைத்தது. 

அந்த பொழுதில் தான் ஒரு தகவல் வேகமாக கிடைக்கிறது. தமிழக தலைமை செயலகத்தில் ஒரு பகுதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் கூட மிகவும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. விடுமுறை நாளில் தலைமைச் செயலகத்துக்கு ஊழியர்கள் யாரும் வரமாட்டார்களே, எப்படி இவ்வளவு பரபரப்பாக இருக்கிறது என விசாரித்த வேளையில் அங்கே யாகம் ஒன்று நடப்பதாக தகவல்கள் கசிந்தன. 

வேலை நாட்களில் கூட வெறிச்சோடும் தலைமைச்செயலகத்தில் நான்காவது நுழைவு வாயிலின் வழியாக உள்ளே சென்றால் முதல் தளத்தில் இயங்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அறையில் தான் அந்த பரபரப்பு. பிரம்மமுகூர்த்தமான அதிகாலையில் இருந்தே காலை வரை யாகம் நடந்துள்ளது. 

இந்த யாகம் எதற்காக என்று விசாரித்த போது பின்னணியில் தினகரனும், திமுகவும் இருப்பது தெரிய வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் தினகரன் தரப்பும், திமுக தரப்பும் தொடர்ந்த ஓ.பன்னீர்செல்வம்  உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கு விரைவில் தீர்ப்பு வர இருக்கிறது.  இந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும். 

ஆகவே ஆட்சி நிலைக்கவும், துணை முதல்வர் பதவியை தக்கவைக்கவும், தலைமை செயலகத்தில் யாகங்களை நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வத்தின் ஆஸ்தான ஜோதிடர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அதன்படியே பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கி அதிகாலை வரை யாகம் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த யாகம் மூலம் தனது பதவிக்கு ஆபத்து இருக்காது என துணை முதல்வர் நம்புகிறாரம். எல்லாம் மேலே இருப்பவர்கள் பார்த்து கொள்வார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops yagna in secretariat


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->