ஓ.பி.எஸ் பிரசார வாகனம் திடீர் விபத்து.! அதிர்ச்சியில் அதிமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தோ்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி ஒன்று அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி, என் ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணிகள் கட்சிகளை ஆதரித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் முன் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்த வேனில் நின்றவாறு வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.   

இந்நிலையில், இன்று நீலகிரி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்றபோது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென விபத்துக்குள்ளானது. அதற்காக அங்கு சென்ற அவரது பிரச்சார வாகனம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும்போது நடுவட்டம் என்ற பகுதியில் திருப்பத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த வாகனத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இல்லாததால், யாருக்கும் காயம் இல்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops vehicle is accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->