ஜெயலலிதா மரணம் குறித்து திடுக்கிடும் தகவல்!! ஓபி எஸ்சிடம் நாளை விசாரணை!! - Seithipunal
Seithipunal


ஜெயலலிதா மரணம் குறித்து இன்னும் பல உண்மைகள் மர்மமாகவே இருந்து வருகிறது. அதைத்தொடர்ந்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதில் இதுவரை ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவர்களது உறவினர்கள், உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள், கார் டிரைவர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், அப்பல்லோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் என 150-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மேலும் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடமும் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் போது அவர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய விவரங்கள் மற்றும் அரசு எடுத்த முடிவுகள் குறித்தும் விரிவாக வாக்குமூலம் அளித்தார்.

"ஜெயலலித்தாவிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏன் வெளிநாட்டிற்கு அழைத்து செல்லவில்லை அதற்ககு என்ன காரணம்" என்பதை பற்றியும் அவர் விளக்கம் அளித்தார். தற்போது ஆணையத்தின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

இதனை தொடர்ந்து மேலும் துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்த ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரது துறைகளை கவனித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அதனால் ஓ.பன்னீர்செல்வத்தை விசாரித்தால் மட்டுமே முழு விவரமும் தெரிந்துக்கொள்ளலாம் என்ற அடிப்படையில் விசாரணை ஆணையத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆஜராகுமாறு சம்மனில் கூறப்பட்டுள்ளது.

ஆணையத்தில் நாளை ஆஜராகும் ஓ.பன்னீர்செல்வம் முதலில் தனக்கு தெரிந்த தகவல்களை பற்றி முதலில் கூறுவார். அதன்பிறகு சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் ஓ.பன்னீர் செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்துவார். அப்போது பல சிக்கலான கேள்விகளை கேட்க போவதாகவும் அவரது வக்கீல்கள் தெரிவித்தனர்.

அதனால் நாளைய விசாரணையின் போது ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops say jayalalitha death


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->