இபிஎஸ்-ஓபிஎஸ் முயற்சி படுதோல்வி..! சற்று முன்னர் சத்தமில்லாமல் மெரீனாவில் அரங்கேறிய சம்பவம்..? அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா நுழைவாயில், மெரினா கடற்கரையை ஒட்டி உள்ள காமராஜர் சாலையில் ஆளும் அதிமுக அரசால் கட்டப்பட்டு உள்ளது.

கடந்த வருடம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பாக கொண்டாடப்பட்டது.

இந்தவிழாவின் முடிந்தபின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தசட்டமன்ற கூட்ட தொடரில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நினைவு வளைவு அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, 2.52 கோடி ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினமான இன்று (17/01/2018 ) அவரின் நூற்றாண்டு நினைவு நுழைவு வாயிலை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், துணை முதல்வர் ஓ.பன்னேர்செல்வம் அவர்களும் திறந்து வைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

இந்த நிலையில் தற்போது சென்னை காமராஜர் சாலையில் உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு திறக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து விழா எதுவுமின்றி திறக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை திரைகள் அகற்றப்பட்டு எம்ஜிஆர் வளைவு திறக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த நினைவு வளைவு அமைக்க தடை கோரிய பொதுநல வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் சத்யநாராயணன், ஷேசசாயி, ''நினைவு வளைவு மீதுள்ள திரைகளை அகற்றி, திறக்க அனுமதித்த நீதிபதிகள், விழா ஏதும் நடத்தக் கூடாது'' என உத்தரவிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS EPS PLAN FAILED


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->