விடாப்பிடியாக வரிந்து கட்டும் இ.பி.எஸ்........கட்டப்பஞ்சாயத்துக்கு அழைப்பு விடுத்த ஓ.பி.எஸ் : அம்பலமான அதிமுக குட்டு! - Seithipunal
Seithipunal


வரும் 24 -ம் தேதி தமிழகத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியிடம் அ.தி.மு.க பஞ்சாயத்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சரியாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தொடங்கிய தர்மயுத்தத்தை பாதியில் விட்டுவிட்டு தற்போதைய முதல்வர் எடப்பாடியுடன் கை குலுக்கினார் ஓ.பி.எஸ். 

தனக்கு துணை முதலமைச்சர், மாபா.,வுக்கு அமைச்சர், துணையாக வந்தவர்களுக்கு கட்சி வழிகாட்டுதல் குழுவில் இடம் மேலும் இக்குழு கூடி கட்சிபதவிகளுக்கு நியமனம் செய்கையில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களுக்கு கணிசமான இடம் என்று முடிவு செய்யப்பட்டது. 


 
ஆனால் நடந்ததோ வழிகாட்டு குழு கடந்த ஒருவருடமாக கூடவே இல்லை. அதன் காரணமாக கட்சி பதவி யாருக்கும் கிடைக்கவில்லை. 

மாபாவுக்கு கிடைத்ததோ பைசா காசு கூட பெறாத தொல்பொருள் துறை அமைச்சர் பதவி தான். மேலும் ஓ.பி.எஸ்.ஸால் தனக்கு தேவையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கூட தனது துறைக்கு கேட்டுப்பெற முடியாத சூழ்நிலை. பல்லைக்கடித்துக் கொண்டு ஒரு வருடமாக ஓட்டியது எதற்காக என்று விசாரிக்கும் போது தான் தெரிய வந்தது உண்மையான காரணம்.

அதாவது, ஓ.பி.எஸ்-இ.பி.எஸ் அணிகள் இணைப்பின்போது பேசிய பிரதமர் மோடி, தற்போதைக்கு துணை முதலமைச்சர் பதவியை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்.  

ஒரு வருடம் கழித்து நீங்கள் மீண்டும் முதலமைச்சராக வாய்ப்பு உள்ளது என்று கூறியதாக தெரிகிறது. இதனால் தற்போது ஒரு வருடம் முடிந்துவிட்ட நிலையில் தனக்கு முதலமைச்சர் பதவி தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் ஓ.பி.எஸ். 

ஓ.பி.எஸ்ஸின் இத்தகைய ஆசை குறித்து அறிந்த எடப்பாடி முதலமைச்சர் பதவி மாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தெளிவாக கூறிவிட்டார். இதனால் தான் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பழைய கதையை அவிழ்த்து விட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. 
 
வரும் சனிக்கிழமை அன்று அதாவது பிப்ரவரி 24-ம் தேதி, தமிழகத்திற்கு வருகை தரும் மோடியின் கட்டப்பஞ்சாயத்து களை கட்டப்போகிறது என்று அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops eps again start silent fight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->