அனல் பறக்கும் சட்டசபை விவாதம்! சூட்டை கிளப்பிய காங்கிரஸ்! சூடான ஓபிஎஸ்! அதிமுக தனியாகவே தேர்தலை சந்திக்க தயார் என அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஆனது  கடந்த 8ம் தேதி தொடங்கி நாளை 14ஆம் தேதி வரை நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது தேர்தல் கூட்டணி குறித்து சட்டசபையில் அனல் பறக்க விவாதம் நடைபெற்றது.

உள்ளாட்சி தேர்தலை ஏன் இன்னும் நடத்தவில்லை? தேர்தலை கண்டு அஞ்சுகிறீர்களா?  என திமுக மற்றும் காங். உறுப்பினர்கள் அமைச்சர்  வேலுமணியிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், தேர்தலை எதிர்த்து வழக்கு போட்டது திமுக தான் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தேர்தலை நிறுத்தக்கோரி திமுக வழக்கு தொடரவில்லை, தேர்தலை முறையாக நடத்தக்கோரி தான் வழக்கு தொடர்ந்தோம்  என பதிலளித்து அமர்ந்தார். 

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, தேர்தலை கண்டு அதிமுக அஞ்சவில்லை, தேர்தல் எப்போது வந்தாலும் அதிமுக வெற்றி பெறும் என கூறினார். அதற்கு பதில் கூறிய தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் கே ஆர் ராமசாமி, மத்திய அரசிடம் தமிழக அரசு சிக்கிகொண்டுள்ளது, மத்திய அரசு மாநில அரசுகளை மிரட்டி வைத்துள்ளது. அதனால் நிதி பெற முடியவில்லை என தெரிவித்தார். தமிழக அரசு யாரிடமும் சிக்கவில்லை, தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம் என  முதலமைச்சர் பதிலளித்தார். 

இப்படியான விவாதம் ஆனது தேர்தல் கூட்டணியை நோக்கி நகர ஆரம்பித்தது. காங்கிரஸ் சட்ட சபைத் தலைவர் கே ஆர் எஸ் எஸ் ராமசாமி அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணியிடம் வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் அதிமுக தனியாக போட்டியிட தயாரா என்று கேள்வி எழுப்பினார். மேலும் ஜெயலலிதா இல்லாத அதிமுக தனித்துப் போட்டியிட்டால் தான் அதிமுகவின் உண்மையான பலம் தெரியவரும் எனவும் ராமசாமி தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்துப் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி வைக்காமல் தனியாக தேர்தலை சந்திக்கும் என்றால் தனியாக நிற்க நாங்களும் தயார் என்று பதிலளித்துள்ளார்
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops challenge to other parties for become elections


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->