திடீர் பதற்றம்! ஓ.பன்னீர்செல்வத்தின் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்! - Seithipunal
Seithipunal


கஜா புயல் காரணமாக  நாகப்பட்டிணம், கடலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 நிவாரண முகாம்களில் 2,49,083 பேர் உள்ளனர்.  புயலால் பல இலட்ச மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.


 
குறிப்பாக நாகை, புதுக்கோட்டை மாவட்டங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அங்குள்ள மக்களுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, தங்க இடம் கூட இல்லாமல் தவித்து வருகின்றார். தமிழக அரசும் போதிய நிவாரணம் வழங்கவில்லை என்றும், அரசின் நிவாரணம் மக்களுக்கு சரியாக சென்றடையவில்லை எனவும் பலர் புகார் எழுப்புகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு, சமூக நல அமைப்புகளும், இளைஞர்களும் தானாக முன் வந்து, டெல்டா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், புதுக்கோட்டை மாவட்டத்தில் களமாவூர், கீரனூர், குளத்தூர், அடப்பாக்காரசத்திரம், திருவப்பூர் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு பணிகளை பார்வையிட்டதோடு, பொதுமக்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.

மேலும், கந்தர்வகோட்டை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் காரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு காவல் துறையினர்  துணை முதலமைச்சரின் காரை பத்திரமாக அனுப்பிவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops car stop in pudukottai people


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->