நீங்க ஓட்டையாக்கிய சட்டியை , நாங்க சரி செய்து சமைக்குறோம்., காரசார விவாதத்தில் பதிலடி கொடுத்த ஓ.பி.எஸ்., ஓட்டை சட்டியான தமிழ்நாடு..! - Seithipunal
Seithipunal


சென்னை: சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள்தான் நாங்கள் சரிசெய்து சமைக்கிறோம் என திமுகவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  பதில் அளித்துள்ளார். 

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் காலை முதலே காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மற்றும் மேலும் பல பிரச்சினைகள் தொடர்பான காரசார விவாதம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பட்ஜெட் தொடர்பான திமுகவின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.

           

 

அப்போது சட்டியை ஓட்டையாக்கியது நீங்கள் தான், அந்த ஓட்டையை சரி செய்து நாங்கள் சமைத்து வருகிறோம் என ஓபிஎஸ் கூறினார். 

நிதிநிலை அறிக்கை குறித்து  ஓட்டை பானையில் சமைக்கிற பட்ஜெட் என ஸ்டாலின் முன்னரே  கருத்து கூறியிருந்தார். அதனை நினைவு கூர்ந்து ஓபிஎஸ் சட்டசபையில் இன்று பதிலடி கொடுத்தார்.

பின் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேறியதை அடுத்து சபாநாயகர் தனபால் தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவை  தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I cooked after correcting the broken pot.,answered by ops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->